Thursday, December 20, 2012

விஞ்ஞானி பணி

புதுடில்லியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் விஞ்ஞானி பணிக்கான ஆள்சேர்க்கை நடைபெற உள்ளது.

குரூப் C மற்றும் குரூப் D பிரிவில் விஞ்ஞானியாக பணியாற்ற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் வேளாண்மை, பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற ஏதேனும் ஒரு துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பவர்கள் 35 முதல் 45 வயதிற்கு உட்பட்டவராகவும், 4 முதல் 8 வருட பணி அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். www.dst.gov.in எனும் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜனவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி;

The Director, Department Of Science & Technology, Technology Bhavan, New Mehrauli Road, New Delhi-110 016.

No comments:

Post a Comment