Thursday, December 20, 2012

Regional Sales Manager


துடில்லியில் உள்ள Hindustan Insecticides Limited நிறுவனத்தில் மேலாளர் பணிக்கான ஆள்சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Regional Sales Managerஆக பணியாற்ற அறிவியல், வேளாண்மை சார்ந்த ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். Marketing, Sales Of Pesticides, Agri Inputs தொடர்புடைய பணிகளில் 10 வருட அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர் 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். Seed Production துறையில் மேலாளராக பணியாற்ற வேளாண் துறையில் முதுநிலைப் பட்டத்துடன் 6 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிப்பவர் 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

www.hil.gov.in எனும் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாயைச் செலுத்த வேண்டும். இதனை Hindustan Insecticides Limited எனும் முகவரிக்கு வரைவோலையாக அனுப்பவும். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கட்டணத் தளர்வு உண்டு.

டிசம்பர் 23-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி; Deputy General Manager P&A, Hindustan Insecticides Limited Corporate Office, SCOPE Complex, Core-6, 2nd Floor, 7 Lodhi Road, New Delhi-110 003.

மேலும் விவரங்களுக்கு www.hil.gov.in எனும் இணையதளத்தையோ hq@hil.gov.in எனும் மின்னஞ்சலையோ அணுகலாம். அல்லது 044-2436 6907 எனும் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment